Tuesday, December 14, 2010

பரிந்து மன்றாட்டு ஜெபம்

அன்பும் இரக்கமும் கிருபையும் கொண்ட நல்ல தகப்பனே இந்த காலைவேளைக்காய் உம்மை நன்றியோடு துதிக்கிறேன். அன்பின் ஆண்டவரே இந்த ஒய்வுநாட் காலைப்பொழுதிலும் சிறுவர்களாய் வாலிபர்களாய் வளர்ந்தவர்களாய் ஒன்று கூடி உம்மை ஆராதிக்க உம்மை தொழுதுகொள்ள நீர் கொடுத்த மேலான தயவிற்காய் உம்மை நன்றியோடு ஸ்சோத்தரிக்கிறோம்.
அன்பின் நல்ல தகப்பனே இந்த வரிடத்தின் இறுதி நாட்;கள் மட்டும் நீர் எம்மை பாதுகாத்து பராமரித்து பரிசுத்தப்படுத்தி உம்முடைய கிருபையினால் இரக்கங்களினால் எம்மைக்காத்துக்கொண்டு உம்முடைய அளவிடமுடியாத அன்பினால் இழுத்துக்கொண்டு கண்மணிபோல் கருத்தாய் எம்மை நீர் வல்லமையாய் வழிநடத்துகின்ற கிருபைகளுக்காய் உம்மை நன்றி நிறைந்த உள்ளங்களோடு ஸ்சோத்தரிக்கிறேன்.
தந்தையே ஆண்டவரே இந்த நாளிலும் புனித அந்திரேயா திருச்சபை குடும்பங்களுக்காய் ஜெபிக்கிறோம். பலவிதமான பாடுகள் பல விதமான துன்பங்கள் பல விதமான தொல்லைகள் இவற்றின் மத்தியிலே சிக்கி சிதைந்து மனம் உடைந்து நிம்மதி இழந்து சமாதானத்தை பறிகொடுத்து இந்த நாளிலும் உமது திருச்சன்னிதானத்திலே கண்ணீரோடு புலம்பிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு குடும்பங்கள்மேலும் உம்முடைய பிரசன்னம் உம்முடைய ஆறுதல் உம்முடைய சமாதானம் தங்கும் படியாக உம்பாதம் பணிந்து ஜெபிக்கிறோம். 
அன்பின் ஆண்டவரே மீண்டுமாய் எமது திருச்சபை போதகர் ஜயாவின் குடும்பத்தை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம். அவருடைய ஊழியங்களுக்காய் ஜெபிக்கிறோம்.அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு என்ற உம்முடைய ஆதங்கத்தை உணர்ந்து உம்முடைய திருப்பணிக்கென தம்மை ஒப்புக்கொடுத்து உம்முடைய ஊழியனை உம்முடைய கரங்களில் வைத்து தாங்கும் எந்த கஷ்டங்களோ துன்ப துயரங்களோ! தொல்லைகளோ அவரை அசைக்காது காத்துக்கொள்ளும் படியாக மிகுந்த உருக்கமாய் ஜெபிக்கிறோம். நல்ல தகப்பனே! அடுத்ததாக எமது திருச்சபை முலமாக நடைபெறும் ஒவ்வொரு நற்பணிகளுக்காய் ஜெபிக்கிறோம்.
பல சிரமங்களின் மத்தியில் பல சாவால்களுக்கு மத்தியில் பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வளவு மாபெரும் பணியை இதுவரை கொண்டு நடத்த நீர் பாராட்டி வருகிற உம்முடைய கிருபை பெரியது இவ்வளவு பணிகள் அனைத்தும் உம்முடைய நாம மகிமைக்காகவே எற்படுத்தப்பட்டன என்பதையும் நீர் அறிவீர். எனவே தந்தையே இப்பணிகள் ஒருபோதும் தடைபட்டு போகாத படி காத்துக்கொள்ளும் இதற்;காக அரும்பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கிற திருச்சபை ஊழியர்கள் வெளிநாட்டு நண்பர்கள் அனைவரையும் இப்பணிகள் மென்மேலும் வளர உற்ச்சாகப்படுத்தி உக்கப்படுத்த வேண்டும் என ஜெபிக்கிறோம்.
இரக்கமுள்ள தந்தையே எதிர்வருகின்ற 5ம்,6ம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற அமரிக்கன் இலங்கைமிஷன் மாகாநாட்டுக்காய் ஜெபிக்கிறோம். என்ன நோக்கத்திற்க்காக இம்மாகாநாட்டை கூட்டினீரோ அந்த நோக்கம் அந்த எண்ணங்கள் உம்முடைய சித்தம் நிறைவேற கிருபை செய்யும் அன்பின் ஆண்டவரே மீண்டுமாய் இந்த வரிடம் கா.பொ.த(சா / த) பரீட்சைக்கு தாயார்படுத்தும் நமது திருச்சபை மாணவ மாணவிகளுக்காய் ஜெபிக்கிறோம்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவையான நிறைவான ஞானத்தைக்கொடும் நிறைவான புத்தியைக்கொடும் படிக்கின்ற பாடங்களை முறையாக விளங்கி கற்றுத்தேற தேவையான ஞாபகசக்தியைக் கொடும். ஞானத்தில் குறைவுள்ளவன் என்னிடத்தில் கேட்க்ககடவன் என்ற உம்முடைய திருவார்த்தையை தினமும் ஞாபகத்தில் நிறுத்தி நீர் கொடுக்கிற நல்ல நேரங்களையும் காலங்களையும் சிறந்த முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கும் இந்த சமுகத்திற்கும் உமக்கும் எற்ற பிள்ளைகளாக வளர்ந்து வர கிருபை செய்யும்.
அன்பின் ஆண்டவரே எமது திருச்சபையை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம். இதுவரை காலமும் எமது திருச்சபையை நீர் உரமிட்டு நீர்பாச்சி அனேகருக்கு பயன் தரக்கூடிய விதத்தில் உம்முடைய சித்தத்தின் படி அனேகருக்கு பயனுள்ள விதத்தில் மாற்றியிருக்கிற கிருபைக்காய் உம்மை நன்றியோடு துதிக்கிறேன் ஆண்டவரே இனியும் இனிவரும் நாட்;களும் இறை ஆறதல் சமாதானம் சந்தோஷம் தருகிற இடமாக இவ்வாலயம் தொடர்ந்து விளங்க உம் இருதயமும் உம் கண்களும் இங்கேயே இருக்கும் படியாக ஜெபிக்கிறோம்.
தொடர்ந்து மீண்டுமாய் எமது தேசத்தை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம். துன்பம் துக்கம் துயரம் வேதனை சாமாதானம் இன்மை பயம் விலைவாசி உயர்வு இவ்வாறாக நாளுக்கு நாள் தேசத்தின் நிலைகள் மாறிக்கொண்டிருப்பதை அவதானிக்கூடிதாய் இருக்கிறது. என் இந்த நிலமை நமது தேசத்திற்க்கு என்று சிந்திக்கிற பொழுது ஆளும் தலைவர்கள் மத்தியில் போட்டி பொறாமை சுயநலம் அரசியல் லாபம் போன்ற கெட்ட குணங்கள் நிறைந்து காணக்கூடிதாய் இருக்கிறது இந்த நிலமை எமது தேசத்திலே மாறவேண்டும் சாந்தி சாமாதானம் நிலவவேண்டும் அதற்கு நீர் தான் அருள் புரியவேண்டும் என ஜெபிக்கிறேன்.
மற்றும் அண்மையில் ஏற்பட்ட போர் காரணமாக இன்னமும் துக்கங்களோடு துன்பங்களோடு துயரங்களோடு உணவில்லாமல் உடையில்லாமல் உறைவிடமில்லாமல் அல்லலுறும் எமது அன்பின் உறவுகளுக்காய் ஜெபிக்கிறோம். இந்த நிலமை மாறவேண்டும் எம் உறவுகள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்வாதாரங்களை மீண்டுமாய் கட்டி சந்தோஷமாய் வாழவேண்டும் அவர்கள் இழந்தற்க்கும் அதிகமாக இரண்டத்தனையாய் ஆசீர்வாதங்களை பெறவேண்டும் இதற்கும் நீரே இரக்கம் காட்ட வேண்டும் என உம் பாதம் பணிந்து கண்ணீரோடு புலம்பி நிற்கிறோம். ஆண்டவரே அன்பின் தகப்பனே எமது திருச்சபை வாலிப பிள்ளைகள் பெண்கள் ஜக்கியத்தினர் அனைவரது பணிகளையும் உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து நிற்கிறோம் திருச்சபை பணிகளில் அனைவரும் உடன் நின்று உழைக்க கிருபை செய்யும்
தந்தையே ஆண்டவரே இதுவரை நேரமும் எமது வேண்டுதலை பொறுமையோடு நீர் கேட்டுக்கொண்ட கிருபைக்காய் உம்மை நன்றியோடு துதிக்கிறேன். இதுரைக்கும் என் நாமத்திலே ஒன்றும் கேட்க வில்லை கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும் படி பெற்றுக்கொள்வீர்கள் என்று வாக்குரைத்த நல்ல தகப்பனே இதுவரை நேரமும் எங்கள் சந்தோஷம் எங்கள் ஆதங்கங்கள் எங்கள் புலம்பல்கள் அனைத்தையும் உம்மிடம் ஒப்புவிக்கிறோம். எங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று செயலாற்றுகிற இறைவன் நீர் உம்முடைய சித்தத்தின் படி அனைத்தையும் உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து இயேசுவின் நாமத்தில் ஜெபித்து ஜெயமெடுக்கிறேன். ஜீவனுள்ள நல்ல தகப்பனே.                                              ஆமென். 


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Get Slots - Casino Roll
    What you get is 텐뱃 a 100% bonus on a 200% deposit bonus up to $1,000 plus a 100% deposit 가입머니 지급 사이트 match 토토 사이트 해킹 up to $1000 for all slots. All casino games 피망 슬롯 are 코인 일정 사이트 instant

    ReplyDelete